நீரின்றி அழிவடையும் நிலையில் வயல் நிலங்கள் : பணம் செலுத்தியும் பயனில்லை என்கிறார் விவசாயி

Published By: Digital Desk 5

16 Jan, 2023 | 02:36 PM
image

கிளிநொச்சி பெரியபரந்தன் கமக்கார அமைப்பிற்குட்பட்ட இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள ஐந்து ஏக்கர் வயல் நீரின்றி அழியும்  நிலையில் இருப்பதாக விவசாயி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில்  காணப்படுகின்ற தன்னுடைய வயல் நிலம் இரண்டு போகம் விதைக்க கூடிய வயல் நிலம் எனவும், எனவே குறித்த காணிக்கு நீர் விநியோகின்ற வழியில் தற்போது கழிவு நீர் செல்கின்ற வாய்ககால் சீரமைக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளதால் தன்னுடைய சொந்த செலவில் வயலுக்கு நீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் அதிகளவு வெள்ள   நீர்காரணமாக உடைந்து காணப்படுகிறது.

இதனை சீரமைத்து தன்னுடைய ஐந்து ஏக்கர் வயல் காணிக்கும் நீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு கமக்கார அமைப்பு மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் ஆகியோரிடம் பல  தடவைகள் கோரியும் இதுவரை செய்து தரவில்லை.  

இதற்கு நிதியில்லை என்று காரணம் கூறுகின்றனர்  எனத் தெரிவித்த அவர் வருடந்தோறும் வாய்க்கால்  சீரமைப்பு நிதி உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் கமக்கார அமைப்புக்கு முறையாக செலுத்தி வருகின்றேன் ஆனால் என்னுடைய வயலுக்கு நீரை பெற்றுக்கொள்ள வாய்க்கால் இன்றி காணப்படுகிறது.

எனவே உரிய தரப்பினர் எனது ஐந்து ஏக்கர் வயலும் அழியும் முன்னர் விரைந்து செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16