.நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 5 இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தின் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் விமானத்தில் இருந்த 72 பேரும் பலியானார்கள். இந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகியோரும் இருந்தனர்.
இவர்களில் 4 பேர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில் நேபாள விமான விபத்தில் இறந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- நேபாளத்தில் நடந்த விமான விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. இதில் உயிரிழந்த இந்தியர்கள் உள்பட அனைத்து மக்களுக்கும் சிரம் தாழ்ந்த அஞ்சலி. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். பகவான் ஸ்ரீராமரின் புனித பாதங்களில் மறைந்த ஆத்மாக்களுக்கு இடம் கொடுக்கட்டும். இறந்தவர்களின் உடல்களை உத்தரபிரதேசத்துக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM