நேபாளம் தசாப்தகால வரலாற்றில் சந்தித்த மோசமான விமானவிபத்தில் உயிருடன் எவரையும் மீட்கலாம் என்ற நம்பிக்கை குறைவடைகின்றது என மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவரும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என பொலிஸ் பேச்சாளர் டெக் பிரசாத் ராய் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
காத்மண்டுவிலிருந்து பொக்காரா சுற்றுலா நகரிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்68 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை.
விமானநிலைய ஓடுபாதையை வந்தடைந்ததும் யெட்டி எயர்லைன்ஸ் விமானம் உருளுவதை கையடக்க தொலைபேசி காட்சிகள் காண்பித்துள்ளன பின்னர் அந்த விமானம் செட்டி ஆற்றின் பகுதியில் நிலத்தில் வீழ்ந்தது.
விமானபணியாளர்கள் உட்பட 72 பேர் அவ்வேளை விமானத்தில் காணப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை விமானத்தின் சிதைவுகள் மத்தியில் தேடும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
விமானம் வானிலிருந்து விழுந்ததை கண்ட பின்னர் அந்த இடத்திற்கு ஓடியதாக திவ்வியா டகல் என்பவர் தெரிவித்துள்ளார்.
நான் அங்கு சென்றவேளை ஏற்கனவே அங்கு பலர் காணப்பட்டனர் விமானத்தின் சிதைவுகளில் இருந்து பெரும் புகை வெளியாகிக்கொண்டிருந்தது. ஹெலிக்கொப்டர்கள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்தன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் பொதுமக்களின் பகுதிகள் மீது மோதுவதை விமானவோட்டி தவிர்த்தார் செட்டி ஆற்றின் பகுதியில் சிறிய நிலம் காணப்பட்டது விமானம் அந்த பகுதியில் விழுந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் விமானவிபத்துக்கள் என்பது வழமையான விடயமாக காணப்படுகின்றது-தொலைதூர ஓடுபாதைகளும் அடிக்கடி மாறும் காலநிலையும் இதற்கான பிரதான காரணங்களாக காணப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM