தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா

By Nanthini

16 Jan, 2023 | 11:18 AM
image

ல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத, விசித்திர ‘பட்டத் திருவிழா' நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜன. 15) வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது, போட்டியாளர்கள் பல வண்ணங்களில் விசித்திரமான பட்டங்கள் செய்து, பறக்கவிட்டனர்.

இதில் உருமாறும் மர்ம தாக்குதல் விமானத்தை போன்ற பட்டத்தினை செய்த ம.ஹாசன் என்பவர் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார். இவருக்கு இரண்டு பவுண் தங்க ஆபரணம் பரிசாக வழங்கப்பட்டது. 

அத்துடன் இவர் இந்த நிகழ்வில் 6ஆவது தடவையாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து, உழவு இயந்திரம், மரநடுகை திட்டத்தை போன்று பட்டம் அமைத்த ம. பிரசாந் என்பவர் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.

இதில் மூன்றாம் இடத்தினை மேள தாளங்களுடன் கூடிய ஆகாய விசித்திர போர்க்கள அரங்கம் போன்று பட்டத்தை அமைத்த நிரோசன் சின்னா என்பவர் பெற்றுக்கொண்டார்.

முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும், பட்டப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளை கருவேற்காடுபதி ஶ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான...

2023-02-08 16:50:46
news-image

மக்கள் வங்கி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி...

2023-02-08 12:05:57
news-image

விஷ்வ கலா அபிமாணி 2023 விருது

2023-02-08 12:06:14
news-image

ரின்ஸாவுக்கு 'விஷ்வ கலா அபிமானி' விருது  

2023-02-08 12:07:11
news-image

கராத்தே கலை - அங்கீகாரத்திற்கான வழிமுறை...

2023-02-08 12:07:50
news-image

கண்டியில் சுற்றுலாத்துறையினருக்கு சைக்கிள் சவாரி ஊக்குவிப்பு

2023-02-07 14:43:50
news-image

LMSV, 'Rotary Honda Purudu Championship'சிறுவர்களின்...

2023-02-07 12:17:22
news-image

அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர்பவனி

2023-02-07 11:28:05
news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58