வவுனியா நகரசபையின் பொதுப்பூங்கா நெல்லிசிப் திட்டத்தில் புனர் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட உள்ளதாக வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர். தயாபரன் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக இப்புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்ததுடன் அனைத்து வேலைகளும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு இன்று பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. வவுனியா நகரசபைச் செயலாளர் தலைமையில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும் நெல்சிப் திட்டப்பணிப்பாளருமான பொ. குகநாதன் மற்றும் உலக வங்கி உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வவுனியா நகரசபை, நெல்சிப் திட்டம் என்பன இணைந்து சுமார் 10 மில்லியன் ரூபா செலவில் பொதுப் பூங்கா புனர் நிர்மானம் செய்துவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- சதீஸ்