யப்பான் யென்களைத் திருடிய கணவனும் மனைவியும் கைது

Published By: Digital Desk 5

16 Jan, 2023 | 10:53 AM
image

அக்குறணைப் பிரதேசத்தில் வைத்து, வாகனம் ஒன்றினுள்  இருந்த 5 இலட்ச ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதி கொண்ட யப்பான் யென்களைத் திருடிய குற்றத்திற்காக கணவனும்,  மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது-

அக்குறணை 7 ஆம் மைல் பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தில் ஒருவர் வாகனம் ஒன்றை செலுத்தி வந்துள்ளார்.

அவரது மகன் வெளிநாட்டில் தொழில் புரிந்து நாடு திரும்பியவர். அவரது பணப்பை ஒன்று வாகனத்தில் காணப்பட்டுள்ளது.

வாகனத்தைச் செலுத்தியவர் தனது நண்பர் ஒருவரைக் கண்டு வாகனத்தை நிறுத்தி கதைத்துக் கொண்டிருந்துள்ளார்.

அவ்வேளை வாகனம் கொள்வனவு செய்யும் ஒருவர் அவ் வாகனத்தை பரிசோதனை செய்துள்ளார். அப்போது அங்குள்ள பணப்பையை கண்டு அதனை தந்திரமான முறையில் திருடியுள்ளார்.

பணத்தைப் பறி கொடுத்தவர் சி.சி.ரி.வி. யின் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போது திருடியவர் இனம் காணப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை  125 000 ரூபாவுக்கு  இலங்கைப் பணமாக மாற்றி அதில் 120 000 ரூபாயை தனது மனைவியிடம் கொடுத்துள்ளார்.

மேலும் மேற்கொண்ட சோதனையின் போது திருடப்பட்ட பணத்தின் மற்றும் ஒரு பகுதியும் வீட்டில் வைத்துக் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பணத்தை திருடிய குற்றத்திற்காகக் கணவனும், திருட்டுப் பொருளை உடன் வைத்திருந்த குற்றத்திற்காக மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அளவத்துகொடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27
news-image

புத்தசாசனத்துக்கு பாதிப்பெனக் குறிப்பிட்டு உண்மை பிரச்சினைகளை...

2023-05-29 15:42:48
news-image

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும்...

2023-05-29 14:35:56