கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவில் இரு மாடிக்கட்டிடத்தில் 5 காவல் நாய்களுடன் கசிப்பு உற்பத்தி செய்த இடம் ஒன்றைப் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் படி மேற்படி சொகுசு மாடிக்கட்டிடத்தை முற்றுகை இடச் சென்ற போது வாயிற் கதவு முன் உயர் ரக வளர்ப்பு நாய்கள் ஐந்து உட்பிரவேசிக்க முடியாது குரைத்து இடையூறு செய்துள்ளன.
இருப்பினும் சில பொலிஸார் வீட்டுப் பாதுகாப்பு மதிலின் மீதேறி மற்றொரு பகுதியின் ஊடாக வீட்டினுள் உட்பிரவேசித்து சோதனையிட்டுள்ளனர்.
அப்போது 36 போத்தல்களில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு மற்றும் வடி சாராயத்தைக் கைப்பற்றியுள்ளனர். குறித்த கசிப்பு போத்தல்கள் அவ்வீட்டுனுள் தயார் படுத்தப்பட்டவை எனப் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள அதேவளை கண்டி நீதவான் முன் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM