தலவாக்கலை லோகி தோட்ட மிடில்டன் பிரிவில் தீ : 7 வீடுகள் தீக்கிரை : 12 குடும்பங்கள் நிர்க்கதி

Published By: Digital Desk 5

16 Jan, 2023 | 10:11 AM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தின் மிடில்டன் பிரிவில் நேற்றிரவு (15) ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.

மேலும், 5 வீடுகள் பகுதியளவில் சேதமமைந்துள்ளன. இதனால் 12 குடும்பங்களை சேர்ந்த 49 இற்கும் மேற்பட்டோர்  நிர்க்கதியாகியுள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் நேற்றிரவு திடீரென தீ விபத்த  ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் வந்தனர்.

அதற்குள் தீ வேகமாக பரவியது. பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள், தலவாக்கலை பொலிஸாருடன் இணைந்து சுமார் மூன்று மணித்தியாலயங்களுக்கு பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது வீடுகளில் வசித்த பெருந்தொகையானோர் தோட்டத்தில் நடைபெற்ற தைப் பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்ததால் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

தீயினால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களில் 3 குடும்பங்கள் மாத்திரம் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 9 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளதாக தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி மற்றும் பிரதேசவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கும் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30