நாடளாவிய ரீதியில் தமிழர்கள் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்

By Vishnu

15 Jan, 2023 | 08:17 PM
image

யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2023) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.

முல்லைத்தீவில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்

தமிழர் திருநாள் "தைப்பொங்கல் " நிகழ்வுகள் இன்றையதினம் (15)தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயக பகுதிகளிலும் தமிழ் மக்கள் பொங்கல் பொங்கி சூரியனுக்கும் இயற்கைக்கும் ,உழவனுக்கும் நன்றி செலுத்தினர் .

மக்களின் வீடுகள், வியாபார இஸ்தாபனங்கள், தொழில் நிலையங்கள் ஆலயங்களில் பானைகளில் பாலிட்டு பொங்கல் பொங்கிதைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் .

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விலைவாசி ஏற்றத்துக்கு மத்தியிலும் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் மக்கள் தமிழர் திருநாளை கொண்டாடினர். வாழ்க்கை செலவு அதிகரிப்பு காரணமாக பானை உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விலை இம்முறை மிகவும் அதிகமாக காணப்ட்டுகின்ற நிலையில் நாளாந்தம் உழைப்பை நம்பி வாழும் பெரும்பாலான குடும்பங்கள் பொங்கல் கொண்டாட்டங்களை இம்முறை தவிர்த்துள்ளதாக தெரிவித்தனர் .

விசேடமாக கத்தோலிக்க தேவாலயங்களிலும் தமிழ் மக்கள் பொங்கல் பொங்கி இயற்கைக்கு நன்றி தெரிவித்தனர்.

முல்லைத்தீவு இராயப்பர் தேவாலயம், முல்லைத்தீவு தீர்த்தகரை வேளாங்கண்ணி தேவாலயம், தண்ணீரூற்று தேவாலயம், மாமூலை தேவாலயம், முள்ளியவளை கத்தோலிக்க தேவாலயம், புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு ஆலயம் ஆகியவற்றில் தைப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்

மயூரபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு. பெரியசாமி சுந்தரலிங்கம் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொங்கல் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்பைச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.ரி. குருசாமி, இந்திய உயர்ஸ்தானிகராலய கலாசாரப் பணிப்பாளர் திரு. அங்குரன் தத்தா மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளர் திருமதி. பானு பிரகாஷ் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டனர். 

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) இடம்பெற்ற பொங்கல் விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகணேசன் மற்றும் வடிவேல் சுரேஷ், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்பைச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.ரி. குருசாமி, கட்சியின் அமைப்பாளர்களான திரு. ராம், திரு. லக்‌ஷயன், திரு. நிரோஷ், திரு. இனேஷ்  உள்ளடங்கலான விருந்தினர்கள் கலந்து கொண்டனர். 

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளை கருவேற்காடுபதி ஶ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான...

2023-02-08 16:50:46
news-image

மக்கள் வங்கி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி...

2023-02-08 12:05:57
news-image

விஷ்வ கலா அபிமாணி 2023 விருது

2023-02-08 12:06:14
news-image

ரின்ஸாவுக்கு 'விஷ்வ கலா அபிமானி' விருது  

2023-02-08 12:07:11
news-image

கராத்தே கலை - அங்கீகாரத்திற்கான வழிமுறை...

2023-02-08 12:07:50
news-image

கண்டியில் சுற்றுலாத்துறையினருக்கு சைக்கிள் சவாரி ஊக்குவிப்பு

2023-02-07 14:43:50
news-image

LMSV, 'Rotary Honda Purudu Championship'சிறுவர்களின்...

2023-02-07 12:17:22
news-image

அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய தேர்பவனி

2023-02-07 11:28:05
news-image

'ஆர்ட் ஒப் ஸ்ரீலங்கா' ஓவியக் கண்காட்சி

2023-02-06 14:34:16
news-image

மணிமேகலை பிரசுரத்தின் 32 நூல்களின் அறிமுக...

2023-02-06 13:08:25
news-image

சந்தா வாங்காத சங்கம் - சிவி...

2023-02-06 12:56:10
news-image

நல்லூர் கந்தன் ஆலய தைப்பூச திருவிழா

2023-02-06 11:44:58