(எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டில் வெடிப்பதற்கு இருந்த கடன் கன்னி வெடியை நாமும் தற்போது அனைத்து விட்டோம். கன்னி வெடியை அனைக்கும் நோக்குடனே இந்த வருடம் நாம் பூரணமாக செயற்பட்டோம். தற்போது கடன் கன்னிவெடி தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றியுள்ளோம். அடுத்த வருடத்தில் அபிவிருத்தி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். எனினும் இந்த திட்டத்தை குழப்புவதற்கு எதிரணியினர் திட்டமிட்டு வருகின்றனர். என்ன குழப்பம் செய்தாலும் எமது முன்னேற்ற பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தற்போது நாட்டு மக்கள் அரசு என்ன செய்துள்ளது என கேள்வியெழுப்புகின்றனர். எமது ஆட்சியில் முதலாவது ஆண்டில் நிலையான ஆட்சியை உருவாக்குவதற்கு அத்திவாரமிட்டோம். இரண்டாவது ஆண்டில் கடன் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இனிமேல் அடுத்த வருடத்தில் எமது அபிவிருத்தி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றார்.