கிளிநொச்சி பூநகரியில் நிலவும் வறட்சி காரணமாக பெருமளவான நெற்செய்கை அழிவடைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் பருவ மழையை நம்பிய வகையிலேயே பெரும் போகச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது வளமை. அதே போன்று 202/2023 பெரும் போக செய்கையானது மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக கூடுதலான நெற்செய்கைகள் அழிவடைந்துள்ளன.
குறிப்பாக பூநகரி வாடியடி கறுக்காய் தீவு ஞானிமடம் செல்விபுரம் கரியாலை நாகபடுவான் கொல்லக்குறிச்சி நல்லூர் போன்ற பகுதிகளில் கூடுதலான நெற்பயிர்கள் வறட்சி காரணமாக அழிவடைந்துள்ளன.
குறித்த பகுதிகளில் பெருந்தொகை நிதிகளை செலவு செய்து காலப்போக நெற்செய்கை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போதைய வரட்சியினால் நெற்பயிர்கள் அழிவடைந்து வருகின்றன.
வறட்சி காரணமாக இதுவரை 30 வீதத்துக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக பெருந்தொகை நிதிகளை செலவிட்டு அதிகரித்த விலைகளில் எரிபொருள் தட்டுப்பாடு உரத்துக்கான தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள போதும் இவ்வாறு வறட்சி காரணமாக அழிவடைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாவிக்கப்பட்டுள்ளனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM