இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு முழுநேர சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை கவனம் செலுத்த வேண்டும் என இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் அலஸ்ரியா குக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியுடன் பெற்ற டெஸ்ட் தோல்வியினையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தற்காலிக சுழற்பந்துவீச்சு ஆலோசகராக கடமையாற்றும் முன்னாள் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சக்லைன் முஸ்தாக் அணிக்குள் அழைக்கப்பட்டதற்கு பிறகு இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொஹின் அலி மற்றும் அடில் ரஷாக் ஆகியோரின் பந்துவீச்சில் முன்னேற்றங்கள ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கு முழுநேர சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

இந்திய மண்ணில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் நடந்து முடிந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 48.10 என்ற சராசரியுடன் 40 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

இதனால் சுழற்பந்துவீச்சை வலுப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே முழுநேர சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ஒருவரை இங்கிலாந்து அணிக்கு தெரிவுசெய்வது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.