நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உட்பட 72 பேருடன் பயணித்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

இந்த் விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டது.

இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

காட்மாண்டுவில் இருந்து விமானம், பொக்காரா சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானம் ஓடு தளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்தாவுலா கூறுகையில், "2 கைக்குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டினர் விமானத்தில் இருந்தனர். மேலும் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள் 4 ரஷியர்கள் ஒரு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் 2 பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் (2), அர்ஜென்டீனா மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 67 பேர் விமானத்தில் பயணித்ததாக கூறி உள்ளார். இடிபாடுகளில் எரியும் தீ காரணமாக மீட்பு பணிகள் கடினமாக உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM