தமிழ்மக்களால் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களை நினைவுகூருகின்றேன் - பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்

Published By: Vishnu

15 Jan, 2023 | 02:26 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் சுயநிர்ணய உரிமை, சமாதானம் மற்றும் நீதி ஆகியவற்றை அடைந்துகொள்வதற்காகத் தமிழ்மக்களால் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களை தைப்பொங்கல் தினத்தன்று நினைவுகூருவதாகத் தெரிவித்துள்ள பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் கெய்ர் ஸ்டார்மர், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காண்பிக்காதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு பிரிட்டன் அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

பிரிட்டனிலும், உலகளாவிய ரீதியிலும் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்துத் தமிழர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இது புதிய விளைச்சலைத்தரும் இயற்கைக்கு நன்றி செலுத்தும் நேரம் மாத்திரமல்ல. மாறாக ஓர் சமூகம் என்ற ரீதியில் நாமனைவரும் ஒன்றுபடவேண்டிய நேரமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'இத்தருணத்தில் பெரும் எண்ணிக்கையான தமிழ்மக்கள் நீண்டகாலமாக பிரிட்டனுக்கு வழங்கிவரும் பங்களிப்பை நான் நினைவுகூருகின்றேன்.

அதேவேளை இலங்கையில் சுயநிர்ணய உரிமை, சமாதானம் மற்றும் நீதி ஆகியவற்றை அடைந்துகொள்வதற்காகத் தமிழ்மக்களால் மேற்கொள்ளப்பட்ட தியாகங்களை நினைவுகூரவேண்டிய தருணமும் இதுவாகும்' என்றும் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி, தமிழ்மக்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்கள், இலங்கையின் அரசியல் ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள தளர்வு என்பன தொடர்பில் தான் தீவிர கரிசனை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள ஸ்டார்மர், இவ்வாறானதொரு சூழ்நிலையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காண்பிக்காதிருப்பதை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு பிரிட்டன் அரசாங்கத்திற்கு இருக்கின்றது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 அதேவேளை நீதி மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுமாறு வலியுறுத்திவரும் தமிழ்மக்களுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு தொழிற்கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37