(எம்.ஆர்எம்.வஸீம்)

சீன தலைவர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் அரசாங்கத்தை வீழ்த்தவோ அல்லது புதிய அரசாங்கம் அமைக்கும் விடயமாகவோ  கலந்துரையாடியதில்லை என முன்னாள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயம் தொடர்பாக பல்வேறு பொய்பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் முன்னாள் ஜனாதிபதி எப்போதும் சர்வதேச தலைவர்களை சந்திக்கும்போது நாட்டுக்கு பிரயோசனம் அளிக்கும் விடயங்கள் தொடர்பாகவே கலந்துரையாடுவார். நாட்டுக்குள் அரசியல் அடிப்படையில்  கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மை அளிக்கும் விடயங்களை மாத்திரமே கதைப்பார்.

துறைமுக அபிவிருத்திக்கு கட்டாயம் மக்களின் ஆதரவு தேவை. அதன் நன்மையை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 750 ஏக்கர் சீனாவுக்கு கொடுத்தபோது அன்று எதிர்க்கட்சி நாடு சீனாவுக்கு தாரைவாக்கப்படுவதாக தெரிவித்தது. சீனாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்தவேண்டும் என பிரசாரம் செய்தனர். ஆனால் அரசாங்கம் தற்போது 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை உடனடியாக வழங்கியுள்ளமையானது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றார்