தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இலங்கை தமிழரசுக் கட்சி உரிமை கோர முடியாது - சுரேஷ், செல்வம் தெரிவிப்பு

Published By: Vishnu

15 Jan, 2023 | 01:18 PM
image

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி உரிமை கோரமுடியாது என்று சுரேஷ் பிரேச்சந்திரன் மற்றும், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தெரிவித்தனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்பினர் பயன்படுத்த முடியாது என்று சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ள நிலையில் அதுதொடர்பில் கருத்துவெளியிட்ட சுரேஷ்பிரேமச்சந்திரன், 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்படாத வொன்றாகும். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக்கட்சி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தி அக்கட்சியின் மத்தியகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக வெளியேறியுள்ள நிலையில் கூட்டமைப்பில் உள்ள ஏனை இரு கட்சிகளும் தொடர்ந்தும் கூட்டமைப்பாகவே செயற்படவுள்ளன.

அந்தக் கூட்டமைப்பில் நாம் இணைந்துள்ளோம். ஏனைய இரு தரப்பினரும் இணைந்துள்ளனர். ஆகவே, தமிழரசுக்கட்சிக்கு கூட்டமைப்பை உரிமைகோரும் உரித்துக் கிடையாது என்றார். 

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை தமிழரசுக்கட்சியோ அல்லது, அதிலிருக்கும் ஏனைய தரப்புக்களான ரெலோ,புளொட்டோ பயன்படுத்துவதில்லை என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் செல்வம் அடைக்கலநாதனிடத்தில் வினவியபோது, “இறுதியாக சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை. அவ்வாறான நிலையில் எவ்வாறு இணக்கப்பாட்டை எட்டமுடியும்”என்று கேள்வி எழுப்பினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் தாக்குதல்...

2024-03-04 00:02:28
news-image

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி...

2024-03-03 22:19:24
news-image

பொருட்களின் விலையை குறைக்க பணம் இல்லாத...

2024-03-03 22:02:43
news-image

விவசாயத்தை நவீனமயமாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

2024-03-03 20:54:33
news-image

வெலிகமவில் தனியார் அரபு பெண்கள் பாடசாலையில்...

2024-03-03 19:41:54
news-image

தாவடி சந்தியில் விபத்து - ஒருவர்...

2024-03-03 19:14:27
news-image

ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து கடத்தல்: ...

2024-03-03 18:46:13
news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13