(என்.வீ.ஏ.)
தென் ஆபிரிக்காவின் பெனோனி பி விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் ஏ குழு போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை எதிர்த்தாடிய இலங்கை 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
ஐக்கிய அமெரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 97 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை, பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு ஓவர் மீதமிருக்க 3 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
11ஆவது ஓவரில் இலங்கை 3 விக்கெட்களை இழந்து 46 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. அத்துடன் இலங்கையினால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.
எனினும் அணித் தலைவியும் தேசிய வீராங்கனையுமான விஷ்மி குணரட்ன, 15 வயதான மனூதி நாணயக்கார ஆகிய இருவரும் மிக நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.
விஷ்மி குணரட்ன 40 பந்துகளை எதிர்கொண்டு 34 ஓட்டங்களுடனும் மனூதி நாணயக்கார 31 பந்துகளை எதிர்கொண்டு 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அமெரிக்க பந்துவீச்சில் பூமிகா பத்ரிராஜு 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இணங்கிய அமெரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ரிட்டு சிங் 22 ஓட்டங்களையும் டிஷா திங்ரா 18 ஓட்டங்களைப் பெற்றனர்.
இலங்கை பந்துவீச்சில் தெவ்மி விஹங்கா ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 11 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரை விட விதுஷிக்கா பெரேரா 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இலங்கை தனது 2ஆவது போட்டியில் பங்களாதேஷை திங்கட்கிழமை (16) எதிர்த்தாடவுள்ளது.
இது இவ்வாறிருக்க, ஏ குழுவுக்கான மற்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவை மிக இலகுவாக 7 விக்கெட்களால் பங்களாதேஷ் வெற்றிகொண்டது.
அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்கள்.
பங்களாதேஷ் 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்கள்.
டி குழுவில் இந்தியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் வெற்றிபெற்றன.
கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட இந்தியாவுக்கும் தென் ஆபிரக்காவுக்கும் இடையிலான போட்டியில் இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்கள்.
இந்தியா 16.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்கள்.
ஸ்கொட்லாந்துடான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்கள்.
ஐக்கிய அரபு இராச்சியம் 16.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM