ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'கள்வன்' பட டீசரை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா

Published By: Nanthini

14 Jan, 2023 | 05:18 PM
image

ஜீ.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் பாரதிராஜா இணைந்து நடித்திருக்கும் 'கள்வன்'  திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், அதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'கள்வன்'. 

இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, 'லவ் டுடே' புகழ் நடிகை இவானா, சாய் தீனா, சேரன் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இயக்குநர் பி.வி. ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு கதாநாயகன் ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 

வனம் சார்ந்த சாகச திரைப்படைப்பாக உருவாகி இருக்கும் இதனை அக்ஸஸ் ஃபிலிம் ஃபெக்டரி எனும் பட நிறுவனம் சார்பில் ஜி. டில்லிபாபு தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு டீசரும் வெளியாகியுள்ளது. 

டீசரில் அடர்ந்த வனப்பகுதியில் யானையின் வழித்தட பகுதியை ஆக்கிரமித்திருக்கும் மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையே களவாடும் குடும்பம் ஒன்றின் வாழ்வியல் சார்ந்த துணிச்சலான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதால், படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

‘கள்வன்’ படத்தின் டீஸர், வெளியான குறுகிய கால அவகாசத்துக்குள் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ரொக்கிங் ஸ்டார்' யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்'...

2025-03-24 18:06:30
news-image

அதர்வா வெளியிட்ட 'யோலோ' படத்தின் முதல்...

2025-03-24 17:52:11
news-image

'நரி வேட்டை' படத்தில் நடிக்கும் சேரனின்...

2025-03-24 17:46:39
news-image

சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ' படத்தின் இரண்டாவது...

2025-03-22 17:06:22
news-image

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ' தி...

2025-03-22 17:01:19
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட '...

2025-03-22 17:01:08
news-image

பேய் கொட்டு - திரைப்பட விமர்சனம்

2025-03-22 16:56:06
news-image

அதர்வா நடிக்கும் ' இதயம் முரளி'...

2025-03-22 16:55:46
news-image

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த எம்புரான்...

2025-03-22 16:36:17
news-image

நடிகர் சிரஞ்சீவிக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வாழ்நாள்...

2025-03-22 12:02:21
news-image

ட்ராமா - திரைப்பட விமர்சனம்

2025-03-21 15:57:47
news-image

மாதவன் நடிக்கும் 'டெஸ்ட் ' திரைப்படத்தின்...

2025-03-21 15:57:33