'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பொலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைத்தள தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
முன்னதாக வலைத்தளத்தில் வெளிவந்திருந்த ‘தி ஃபெமிலி மேன்' எனும் வெற்றித்தொடரின் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய வலைத்தள தொடர் ‘ஃபார்ஸி’.
க்ரைம், த்ரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கும் இந்த தொடரில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, கே.கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா, புவன் அரோரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
D2R ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான 'ஃபார்ஸி' வலைத்தள தொடருக்கு சீதா ஆர்.மேனன் மற்றும் சுமன் குமார் ஆகிய இருவரும் ராஜ் - டிகேவுடன் இணைந்து கதையை எழுதியுள்ளனர்.
விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் ஆகிய இருவரும் முதல் முறையாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகவிருக்கும் அமேசான் ப்ரைம் வீடியோவின் அசல் தொடரான 'ஃபார்ஸி’, பெப்ரவரி 10ஆம் திகதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
இந்த வலைத்தள தொடரை பற்றி இயக்குநர்கள் பேசுகையில்,
“இந்த கதை நீண்ட காலமாக எங்களிடம் இருந்தது. எழுத்தாளர்கள் எங்களுடன் இணைந்து, மக்களோடு எளிதாக தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையை எழுதியுள்ளனர்.
அனைவரது கூட்டு முயற்சி தான் இந்த தொடர். உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த தொடர் இருக்கும். நமக்குள் இருக்கும் உண்மையை அடிப்படையாக வைத்து தான் இந்த தொடர் உருவாக்கப்பட்டது.
நடுத்தர வர்க்கத்து மக்களின் எண்ணவோட்டத்தை இந்த கதை பிரதிபலிக்கும். தொடரை பார்த்துவிட்டு, உங்கள் கருத்தை கூறுங்கள்” என்றனர்.
ஒரு கச்சிதமான மோசடியை செயல்படுத்தி அதில் பயணிக்கும் சன்னி, திடீரென தான் ஓர் இருண்ட பகுதிக்குள் நுழைகிறோம் என்பதை உணர்கிறான்.
அதிகம் அறியப்படாத ஒரு 'காமன் மேன்' உடைய வாழ்க்கையின் ஒரு கண்ணோட்டத்தை இதன் முன்னோட்டம் காட்சிப்படுத்துகிறது. இருப்பினும், அவனால் தேசத்துக்கு விளையக்கூடிய ஆபத்துக்களை கலைந்தே தீருவது என்ற குறிக்கோளுடன், வழக்கத்துக்கு மாறாக செயல்படும், அனல் தெறிக்கும் மிடுக்கான அதிரடிப்படை அதிகாரியாக விஜய் சேதுபதி தோன்றுகிறார்.
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கேவின் அடையாளமாக திகழும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த 'ஃபார்ஸி' 8 அத்தியாயங்கள் கொண்ட தொடராக உருவாகியிருக்கிறது.
அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான அதிரடி காட்சிகளுடன், செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புக்கு பாடம் கற்பிக்க நினைக்கும், சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஒரு தெருக் கலைஞனை சுற்றி கதை பின்னப்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM