(எம்.சி.நஜிமுதீன்)

தபால் சேவை ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு முன்வைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானதுதான். சில கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. சில கோரிக்கைகளுக்கான தீர்வு விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்ததை நடத்தியுள்ளேன். பேச்சுவார்த்தை நடத்தி குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்களித்துள்ளதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மேலும் தெரிவித்தார்.