(லியோ நிரோஷ தர்ஷன்)
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை கொழும்பு வருகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மறுப்புறம் சீன சர்வதேச திணைக்களத்தின் பிரதியமைச்சர் சென் ஸோ தலைமையிலான சீன கம்யூனிஸ் கட்சியின் உயர்மட்ட குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்தது.
எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் இந்த சீன பிரதிநிதிகள் குழு பல்வேறு சந்திப்புகளை முன்னெடுக்க உள்ளது.
சீன கம்யூனிஸ் கட்சியின் 20 ஆவது தேசிய காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாண்டில் அக்கட்சிப் பிரதிநிதிகள் வெளிநாடொன்றுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவென்பதுடன் இந்த விஜயமானது பீஜிங்கின் முக்கிய எதிர்கால திட்டங்கள் குறித்து கொழும்பு சந்திப்புகளில் பேசப்படலாம் என இராஜதந்திர மட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும் சீன பிரதிநிதிகள் குழு கொழும்பு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய மறுநாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்பு விஜயம் அமைந்துள்ளது.
கடும் மக்கள் அரச எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இந்த அரசியல் மாற்றத்தின் பின்னர் ஜெய்சங்கர் முதல் தடவையாக கொழும்பிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
இந்த விஜயத்தில் இருதரப்பு உறவுகளின் முழுமையான மீளாய்வு கவனத்தில் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையை பொறுத்த வரையில் கடன் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு இந்தியா மற்றும் சீனாவின் ஒத்துழைப்புகளை எழுத்து மூலமாக கோரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM