சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின மாநாட்டில் மலையக எழுத்தாளர்கள் இருவரின் நூல்கள் தமிழக முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, அமரர் சி.வி. வேலுப்பிள்ளை 1958இல் எழுதிய 'மலையக தலைவர்களும் தளபதிகளும்' என்ற நூலும், மாத்தளை பெ.வடிவேலன் எழுதிய 'வல்லமை தாராயோ' என்ற சிறுகதை தொகுதியும் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளார்.
அத்துடன் தொகுப்பாசிரியர் எச்.எச். விக்கிரமசிங்க பப்பூவா நியூ கினியா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும் மேற்கு ப்ரைட்டன் ஆளுநருமான சசிந்திரன் முத்துவேல் மற்றும் மலேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் வி.சிவகுமார் ஆகியோருக்கு நூல்கள் வழங்கினார்.
இவ்விரு நூல்களில் மாத்தளை பெ. வடிவேலனின் 'வல்லமை தாராயோ' சிறுகதை தொகுதியை தொழில்கள் தமிழாட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் நடைபெறும் தமிழ்நாட்டு புத்தகக் கண்காட்சியில் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM