தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தம் ; கலந்துரையாடல் ஆரம்பம்

Published By: Digital Desk 5

14 Jan, 2023 | 12:43 PM
image

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணிக்கான ஒப்பந்தத்தை எழுதவுள்ள நிலையில் விசேட கலந்துரையாடல் ஆரம்பித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை (14) காலை 11மணியளவில் விசேட கலந்துரையாடல் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது.

கலந்துரையாடலுக்குப் பின்னர் கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

புளொட் சார்பாக த.சித்தார்த்தனும்  ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதனும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசிய கட்சி சார்பாக என்.ஸ்ரீகாந்தாவும் ஜனநாயக போராளிகள் கட்சி சார்பாக வேந்தனும் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னம் தொடர்பில்  இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் நேற்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர். 

தமிழ் மக்கள் கூட்டணியை இணைக்க சமசர முயற்சிகள் மேற்கொண்டபோதும் பலனளிக்காத நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டணி அமைக்க முடிவு எடுத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54
news-image

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் விடுத்துள்ள...

2025-02-11 16:25:59
news-image

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞன்...

2025-02-11 16:23:23
news-image

திருகோணமலையில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் மூவர்...

2025-02-11 16:15:00
news-image

முச்சக்கரவண்டி மோதி ஒருவர் உயிரிழப்பு ;...

2025-02-11 16:10:33
news-image

புதிய மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை...

2025-02-11 16:45:37
news-image

கஞ்சா, ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-11 16:02:43