
சதீஸ்
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து மாங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவத்தினரின் ட்ரக் வாகனமொன்று திடீரென டயர் காற்று போனதால் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மூன்று இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.