"பொங்கல் விருந்தாக வெளியாகியிருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தில் முதல் முறையாக அதிரடியான எக்ஷன் வேடத்தில் நடித்திருக்கிறேன்" என துணிவு படத்தின் நாயகியான மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான 'துணிவு' திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் திகதி வெளியானது.
இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் கண்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளன்று ரசிகர்களுக்கு மத்தியில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தார்.
அதன் பிறகு அவர் படத்தை பற்றி பேசுகையில்,
"முதல் முறையாக பட மாளிகையில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். நான் அதிரடி எக்ஷன் வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை.
இதுபோன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
கேரளாவில் இந்த படத்துக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM