நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஜோ' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 5

14 Jan, 2023 | 12:38 PM
image

தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி, கதையின் நாயகனாக உயர்ந்த நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஜோ' என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் துல்கர் சல்மான் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஜோ'. இதில் ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பவ்யா திரிகா நடித்திருக்கிறார். 

இவர்களுடன் நடிகர் ஏகன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ராகுல் கே. ஜி. விக்னேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். 

தமிழக - கேரள எனும் இரு மாநில எல்லைகளுக்கு இடையேயான கதை களத்தில் நிகழும் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டோக்டர் டி. அருளானந்தூ தயாரித்திருக்கிறார்.  

இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்தில் படத்தின் தலைப்பு மற்றும் தலைப்பிற்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' காதலை மையப்படுத்திய படைப்பு என்றாலும், நாயகனின் 17 வயது முதல் 27 வயது வரையிலான மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறும் சம்பவங்களை உணர்வுபூர்வமாக விவரிக்கும் திரைப்படம் தான் 'ஜோ'.' என்றார்.

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா', 'பிளான் பண்ணி பண்ணனும்' ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர்  ரியோ ராஜ் கதையின் நாயகனாக நடித்திருப்பதால் இப்படத்திற்கு அவருடைய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. 

இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றால் நடிகர் ரியோ ராஜிற்கு தமிழ் திரையுலகில் இடம் கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஓஃபீஸ்' இணைய தொடரின் அறிமுக பாடல்...

2025-01-23 15:35:32
news-image

நடிகர் கவின் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின்...

2025-01-23 15:33:36
news-image

மார்ச்சில் வெளியாகும் சீயான் விக்ரமின் 'வீர...

2025-01-23 15:04:22
news-image

புதுமுக நடிகர் ஜெக வீர் நடிக்கும்...

2025-01-23 15:03:08
news-image

'விடுதலை' பட நாயகி பவானி ஸ்ரீ...

2025-01-22 17:02:31
news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25