கொரோனாவை தடுக்க மூக்கின் வழியாக பயன்படுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு

Published By: Digital Desk 3

14 Jan, 2023 | 11:40 AM
image

கொரோனாவை தடுக்கும் வகையில் மூக்கின் வழியாக பயன்படுத்தக்கூடிய மருந்தினை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

அமெரிக்காவில் உள்ள ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர். 

பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது. இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும். அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம். 

இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொரானா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும். அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள் பயணிப்பது தடுக்கப்படும். 

இந்த மூலக்கூறுகளை மூக்கு வழியாக 'ஸ்பிரே' போல் பயன்படுத்தலாம். வாய் வழியாகவும் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

இதை சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுைரயீரலில் 24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில் எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என் நண்பர் டொனால்ட் டிரம்பிற் மனமார்ந்த...

2024-11-06 16:48:46
news-image

வரலாற்றில் மிகச்சிறந்த மீள்வருகை - டிரம்பிற்கு...

2024-11-06 14:02:51
news-image

இலான் மாஸ்க்கை புதிய நட்சத்திரம் என...

2024-11-06 13:53:50
news-image

மனைவி மெலானியாவிற்கும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்...

2024-11-06 13:22:39
news-image

இனி அமெரிக்காவிற்கு பொற்காலம் ; தேசத்தின்...

2024-11-06 13:16:30
news-image

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி ட்ரம்ப் -...

2024-11-06 12:57:03
news-image

வெற்றியை நோக்கி டொனால்ட் டிரம்ப் -...

2024-11-06 12:28:51
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - டிரம்பிற்கு...

2024-11-06 11:59:03
news-image

பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்து...

2024-11-06 11:16:55
news-image

ஹவாயில் கமலா ஹரிஸ் வெல்வார் -...

2024-11-06 11:30:00
news-image

வேர்ஜீனியாவில் கமலா ஹரிஸ் வெல்வார் -...

2024-11-06 11:04:21
news-image

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - எதிர்பார்த்தபடி...

2024-11-06 08:37:46