(எம்.மனோசித்ரா)
பொதுத் தேர்தலில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படாத நிலைமையில் , உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகளில் பொலிஸாரை உள்வாங்குவதில் சிக்கல் காணப்படுவதாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன , தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 3 பில்லியன் தேவை. கடந்த தேர்தலில் கொடுக்க வேண்டிய தொகையும் வழங்கப்பட வேண்டியுள்ளதால் நெருக்கடியான நிலையே ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தாக்கப்பட்டால் கூட அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கூட போதிய பொலிஸார் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் அழைப்பிற்கேற்ப ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே பொலிஸ்மா அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு பொலிஸ்மா அதிபரினால் இரு பிரதான விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. இது கிராம மட்டத்திலான தேர்தல் என்பதால் வெ வ்வேறு தரப்பினருக்கிடையில் மோதல்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.
எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் விசேட அதிரடிப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது. அந்த சந்தர்ப்பத்திலும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் இராணுவத்தினரையும் அழைக்க நேரிடும் என்று பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு சட்ட விரோதமான சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் பொலிஸாருக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ள நிலையில் , கூலியாட்களைக் கொண்டு பொலிஸார் அந்த பணிகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கூலித் தொழிலாளர்களுக்கு முதலில் பொலிஸாரினால் கொடுப்பனவுகள் வழங்கப்படும். அதன் பின்னர் அதற்கான பணத்தை தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு வழங்கும்.
அத்தோடு தேர்தல் பணிகளில் தவறாமல் கலந்துகொள்வது விசேட கடமை என்பதால், அதற்கு சிறப்புக் கொடுப்பனவானது, தேர்தல் அலுவலகத்தின் ஊடாக பொலிஸாருக்கு வழங்கப்படுகிறது.
அதே போன்று தேர்தல் கடமைகளில் ஈடுப்படுத்தவும் வேட்பாளர்களின் பாதுகாப்பு கடமைகளுக்கும் போதுமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லை.
68 ஆயிரம் பொலிசார் இருக்க வேண்டிய நிலையில் 60 ஆயிரம் பொலிசாரே உள்ளனர். வீடுகளுக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு செல்பவர்கள் தாக்கப்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது கூட கடினமானதாகவே அமையும்.
குடந்த பொதுத் தேர்தலில் ஒரு பில்லியன் ரூபா பொலிஸ் தினைக்களத்தினால் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டது. அந்த தொகை இன்னும் வழங்கப்பட வில்லை. உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்படுமேயானால் 3 பில்லியன் தேவைப்படும்.
கடந்த பொதுத் தேர்தல் கடமைகளுக்கான பொலிஸாருக்கு கிடைக்கப் பெற வேண்டிய நிதி இதுவரையிலும் வழங்கப்படாத நிலையில் , பொலிஸ் திணைக்களமும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தேர்தல் பணிகள் ஆரம்பமாவதற்கு முன்னரே , கடந்த தேர்தலில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற வேண்டிய நிதியை முழுமையாக வழங்குமாறும் பொலிஸமா அதிபர் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM