பிலிப்பைன்ஸில் இறைச்சியைவிட வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

Published By: Digital Desk 3

14 Jan, 2023 | 10:17 AM
image

பிலிப்பைன்ஸில் ஒரு கிலோ சிவப்பு வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ இறைச்சியை விட அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

கிலோவுக்கு 600 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ.3998) என்ற விலையில் விற்கப்படுகிறது. இது கோழி இறைச்சியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை அதிகம் ஆகும். 

பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சியை விட 25-50 சதவீதம் அதிகம். ஒரு கிலோ வெங்காயம் வாங்கவேண்டுமானால் ஒரு நாள் வேலைக்கான பிலிப்பைன்ஸின் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. 

உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 22,000 தொன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என விவசாய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

ரஷ்யா - உக்ரேன் போர், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் தீவிர காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்து, உலகளவில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன. இதன் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் எதிரொலித்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் போர் விமானம் விபத்து ;...

2026-03-06 15:44:35
news-image

போரில் 30க்கும் மேற்பட்ட ஈரான் கப்பல்கள்...

2026-03-06 15:26:57
news-image

ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா...

2026-03-06 12:14:38
news-image

ஈரானில் இரண்டு ஜப்பானியர்கள் தடுத்து வைப்பு...

2026-03-06 11:43:19
news-image

புதிய டெஸ்ட்ராயரை ஆய்வு செய்த கிம்...

2026-03-06 10:41:35
news-image

"ஆயுதங்களைக் கீழே போடுங்கள்; இல்லையேல் மரணம்...

2026-03-06 09:35:51
news-image

குவைத் நகரில் உள்ள அமெரிக்க தூதரக...

2026-03-06 07:56:48
news-image

ட்ரம்ப் விதித்த வரிகள் இரத்து -...

2026-03-06 07:45:39
news-image

சவூதி அரேபியாவை தாக்குவதை ஈரான் தவிர்க்க...

2026-03-06 06:34:06
news-image

மத்திய கிழக்கில் அச்சுறுத்தல்கள்: WHO துபாய்...

2026-03-06 06:21:43
news-image

இஸ்ரேலின் தாக்குதலால் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

2026-03-06 06:14:47
news-image

2026 – 2030 ஐந்தாண்டுத் திட்டம்...

2026-03-05 17:13:15