இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹொப் தமிழா ஆதி கதாநாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்துக்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' பட இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'பி.டி. சார்'. இதில் ஹிப் ஹொப் தமிழா ஆதிக்கு ஜோடியாக நடிகை கஷ்மிரா பர்தேசி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், ஆர். பாண்டியராஜன், இளவரசு, தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர். தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.
பாடசாலையில் பணியாற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஹிப் ஹொப் தமிழா ஆதியின் தோற்றம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
"கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறோம். தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
கணக்கு, அறிவியல், தமிழ் என ஒவ்வொரு ஆசிரியரையும் ஒவ்வொருவருக்கு பிடிக்கும். ஆனால், ‘பி.டி. சாரை’ அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் பிடிக்கும் 'பி.டி. சார்' வேடத்தில் அனைவருக்கும் பிடித்த நாயகனான ஹிப் ஹொப் தமிழா ஆதி நடிப்பது, இரட்டை சந்தோஷம்.
படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டுக்கு கிடைத்த இதே ஆரவாரமான வரவேற்பு, படத்தின் வெளியீட்டின்போது கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM