கசினோவிற்கு சென்றனர் - போலி மதபோதகரின் பிடியில் சிக்குப்பட்டனர் - உலக கிண்ண இலங்கை அணி குறித்து அதிர்ச்சி தகவல்கள்

Published By: Rajeeban

13 Jan, 2023 | 11:05 AM
image

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ரி20 உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடிய இலங்கை அணிவீரர்கள் கசினோவிற்கு சென்றனர்  ஊழலில் ஈடுபட்டனர் போலி போதகர் ஒருவரின் பிடியில் சிக்குப்பட்டனர் என விசாரணை  ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏஎவ்பி இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை அணிவீரர்களின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சுயாதீன ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன என ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

இலங்கை அணியின் உலககிண்ணப்போட்டி தொடர் எதிர்பார்த்ததை விட முன்னரே முடிவடைந்ததை தொடர்ந்து அணி இலங்கைக்கு புறப்படவிருந்தவேளை தனுஸ்ககுணதில கைதுசெய்யப்பட்டார் அவருக்கு எதிராக பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மைதானத்திற்கு வெளியே இலங்கை அணியின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சுயாதீன ஆணைக்குழு வீரர்கள்  அதிகாரிகள் உட்பட பலர் தவறிழைத்ததை கண்டுபிடித்துள்ளது.

சாமிக கருணாரட்ண கசினோவில் மோதலில் ஈடுபட்டார் அவருடன் வேறு ஆறு வீரர்கள் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள விசாரணைக்குழு கசினோவில் ஒருவர் தனது படத்தை எடுக்க முயன்றவேளை அதற்கு சாமிக எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது  என 63 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை திரும்பிய பின்னர் கருணாரட்ணவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒரு வருட தடை விதிக்கப்பட்டது.

வெளிநாட்டு பயணங்களின் போது இலங்கை வீரர்கள் கசினோவிற்கு செல்வதை தடை செய்யவேண்டும் என விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

வீரர்கள் ஹோட்டல்களில் இருந்து வெளியேறுவதையும் ஒழுக்ககட்டுப்பாடுகளை மீறுவதையும்  தடுப்பதற்காக  மனைவிமார்களை ஹோட்டல்களிற்குள் அனுமதிக்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

2016 இல் வீரர்கள் மனைவிமார்களை  ஹோட்டல்களிற்குள் அழைத்து செல்வதற்கு தடை விதித்துள்ளது.

உயர் விளையாட்டு திறன் முகாமையாளரான ஜெரோம் ஜெயரட்ணவிற்கு அணியுடன் தொடர்பில்லாத போதிலும்  அவர் மெல்பேர்னிற்கு அனுப்பப்பட்டார் அவருக்கு பத்து நாட்களிற்கு 7000 டொலர் செலவிடப்பட்டது என தெரிவிக்கும் ஆவணத்தை பார்த்துள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.

இலங்கை அரசியலை தசாப்தகாலமாக ஆக்கிரமித்திருந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவர் இவர்- ராஜபக்ச குடும்பத்தினர் கடந்த வருடம் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் ஜெயரட்ண அணிக்கு எந்த வித பங்களிப்பையும் செய்யவில்லை.மாறாக தனது சகோதரியுடன் நேரத்தை செலவிட்டார் என சுயாதீன விசாரணை குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செலவில் முன்னாள் வீரர் மகேல ஜெயவர்த்தன ஆலோசகராக செயற்பட்டார்,எனினும் அவர் அவுஸ்திரேலியாவில் தனது மினிஸ்ரி ஒவ் கிராப் உணவகத்தின் கிளையை  ஆரம்பித்து வைத்தார் என விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மதபோதகர் என தன்னை தெரிவிக்கும் நபர் ஒருவர் அணிவீரர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தியிருந்தார் அவரின் சொல்லை கேட்டே ஹோட்டல் பணியாளர்களின் அறிவுறுத்தலையும் மீறி அவர் தனது ஹோட்டல் அறையில் விளக்கை எரியவிட்டு சென்றார் என விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த மதபோதகர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46