(பா.ருத்ரகுமார்)

புதிய அரசியலமைப்பில் நீதித்துறை சட்ட ஒழுங்குவிதிகளில் மாற்றம் செய்யப்படுமாயின் அது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை சிறிதளவும் பாதிக்காதவாறு அமைய வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அலகரத்னம் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.