இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளைக்கு நேற்று வியாழக்கிழமை (12) மாலை விஜயம் செய்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான இக்கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எங்களின் நிலைப்பாடு, மக்களின் பொறுப்பு தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.
இத்தேர்தல் பல அரசியலமைப்பு திருத்தங்களோடும் தேர்தல் திருத்தங்களோடும் இடம்பெற வேண்டும்.
இத்தேர்தல் ஏற்கனவே உள்ள நடைமுறையோடு, மக்கள் மத்தியில் பல குறைபாடுகள், ஆட்சி நடத்த முடியாத நிலை, வரவு - செலவுத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவுக்கு ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு என்ற வகையில், ஆளுந்தரப்பில் வெற்றி பெற்று, பதவியை பெற்றிருந்தாலும் எதிர்த்தரப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்த ஆட்சியை நடத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.
இதில் இன்னும் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என அரசாங்கம் கூறியபோதும் அதற்கான திருத்தங்களை இன்னும் செயற்படுத்தவில்லை.
தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில், அவர்களது செயற்குழுவில் பல வகையான கேள்விகள் எழுப்பப்பட்டு, சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியாக, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முன்னால் அந்த செயற்குழுவில் வரைந்த மாதிரி ஒரு சிபாரிசை நாங்கள் வரைந்திருக்கிறோம்.
ஏற்கனவே பெற்ற பெறுமானங்களை கொண்டு ஆட்சி நடத்த முடியாத நிலையில் தேசிய கூட்டமைப்பு பல வெற்றிகளை பெற்றிருந்த போதும், அனுபவங்களை பெற்றிருந்த போதிலும், இப்போது தமிழரசுக் கட்சி ஒரு புதிய நடைமுறை வெற்றியை, அதிக ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு நடைமுறையினை பிரேரித்துள்ளது.
அதைப் பற்றி நாங்கள் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் நிற்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ கட்சிகளுடன் நாங்கள் விவாதித்துள்ளோம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM