சட்ட விரோத யானைக் குட்டி விவகாரம் : வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோருக்கு சிறை

Published By: Vishnu

12 Jan, 2023 | 08:04 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கில், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் உபாலி பத்மசிறி உள்ளிட்ட மூவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (12) தீர்ப்பளித்துள்ளது.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர் உபாலி பத்மசிறி, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் யானைகள் பதிவுப் பிரிவின் முன்னாள் எழுதுவினைஞர் பிரியங்கா சஞ்சீவனி மற்றும் யானைக்குட்டியின் உரிமையாளர் சந்திரரத்ன பண்டார யாதவர் ஆகியோர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வர்களாவர்.

கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி,  தற்போதைய கோட்டை நீதி வான் திலின கமகேவை விடுதலை  செய்திருந்தது.

6.9 மில்லியன் ரூபா பெறுமதியான ‘சகுரா’ என்ற யானைக்குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் நீதவான் திலின கமகே உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

உரிமம் இன்றி யானைக்குட்டியை வைத்திருந்தமை, பொய்யான ஆவணங்களை  தயாரிக்க செய்ய சதி செய்தமை மற்றும் சம்பந்தப்பட்ட யானைக்குட்டியை போலி ஆவணங்கள் கொண்டு  பதிவு செய்தமை உள்ளிட்ட 25 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றச்ப் பகிர்வுப் பத்திரிகை தாக்கல் செய்யப்ப்ட்டிருந்தது. 

இதில், நீதவான் திலின கமகே, சந்திரரத்ன பண்டார யடவர, வனவிலங்கு அதிகாரிகளான உபாலி பத்மசிறி மற்றும் பிரியங்கா சஞ்சீவனி ஆகிய நால்வர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர். 

விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்து  துஷ்பிரயோக தடுப்பு சட்டத்தின் விதிகளை மீறியதற்காக இந்த நால்வருக்கும் எதிராக  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 

யானைக்குட்டிக்கு செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தினால், யானைக்குட்டி பொதுச் சொத்துப் பிரிவின் கீழ் வரும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, வனப்பகுதியில் இருந்து திருடப்பட்ட யானைக் குட்டியை வைத்திருந்ததற்காக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில்,  இந்த வழக்கில் முதல் பிரதிவாதியான முன்னாள் நீதிவான் திலின கமகே சார்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200வது அத்தியாயம் பிரகாரம் பிரதிவாதி சாட்சியங்களை அழைக்காமல், போதிய சாட்சியங்கள் இல்லை என தீர்மானித்து அவரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்தே, மேல் நீதிமன்றம், பிரதிவாதி திலின கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை, மனுதாரர்களால் நிரூபிக்க முடியாது போனதாக  குறிப்பிட்டு அவரை விடுவித்தார்.

இந்த வழக்கின் ஏனைய மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகவும் சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், பிரதிவாதி தரப்பு சாட்சிகளை  விசாரணை செய்வதற்கு இதன்போது நீதிபதி தீர்மானித்தார்.

அதன்படி அம்மூவர் தொடர்பிலும்  விசாரணைகள் தொடர்ந்தன.  அதன்படி அவர்கள் மீதான 18 குற்றச்சாட்டுக்கள்  வழக்குத் தொடுநரால் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நீதிமன்றம் அவர்கலுக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42