(நெவில் அன்தனி)
கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று (12) வியாழக்கிழமை நடைபெற்றுவரும் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு சுமாரான 216 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 215 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தை ஓரளவு சிறப்பாக ஆரம்பித்த இலங்கை, அதன் மத்திய வரிசை வீரர்களின் கவனக் குறைவினாலும் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தினாலும் சரிவு கண்டது.
ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை, எஞ்சிய 9 விக்கெட்களை 113 ஓட்டங்களுக்கு இழந்தது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஆரம்ப வீரர் நுவனிது பெர்னாண்டோ 50 ஓட்டங்களைக் குவித்து பாராட்டைப் பெற்றார். ஆனால், அரைச் சதம் பெற்ற சூட்டோடு அவசரத் துடுக்கை காரணமாக ரன் அவுட் முறையில் 4ஆவதாக ஆட்டமிழந்தார்.
பெத்தும் நிஸ்ஸன்க உபாதைக்குள்ளானதால் அவருக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். மற்றைய ஆரம்ப வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 20 ஓட்டங்ளைப் பெற்றார்.
நுவனிது பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் ஊட்டினர்.
ஆனால் அதன் பின்னர் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
குசல் மெண்டிஸ் (34), தனஞ்சய டி சில்வா (0), அணித் தலைவர் தசுன் ஷானக்க (2), சரித் அசலன்க (15), வனிந்து ஹசரங்க டி சில்வா (21), சாமிக்க கருணரட்ன (15) ஆகியோர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். (177 - 8 விக்.)
துனித் வெல்லாலகே (32), கசுன் ராஜித்த (17) ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து 200 ஓட்டங்களைக் கடக்க இலங்கைக்கு உதவினர்.
இந்திய பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உம்ரன் மாலிக் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM