வீட்டின் அறைகளும் வாஸ்து சாஸ்திரமும்

By Ponmalar

12 Jan, 2023 | 05:06 PM
image

வீட்டின் படுக்கையறை சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கலாம் வீட்டின் உரிமையாளர் குடும்பத் தலைவர் படுக்கையறை தென்மேற்கு திசையில் அமைவது நலம். 

படுக்கை தெற்கு பக்கம் அல்லது கிழக்குப் பக்கம் தலை வைத்து படுப்பது போல் இருந்தால் சிறப்பு. 

நாம் படுத்து உறங்கும்போது நம் தலைக்கு நேராக மேலே பீம் போன்றவை இல்லாமல் இருத்தல் நல்லது. 

*குழந்தைகளுக்கான அறை வடமேற்கில் அமைக்கலாம். போதுமான சூரிய ஒளியும் காற்றோட்டம் நிறைந்ததாக அறை அமைய வேண்டும்.

மனதிற்கு இதமான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய வண்ணங்களில் சுவர்கள் இருப்பின் குழந்தைகளை மகிழ்ச்சியில் வைத்திருக்கும்.

அவர்கள் படிக்கும் பகுதி சுத்தமாக புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் சரியாக அடுக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். 

*குளியலறை வடமேற்கில் அல்லது தென்கிழக்கில் அமைக்கலாம். போதுமான சூரிய வலியும் காற்றோட்டமும் இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே வீட்டில் எப்பொழுதும் குளியல் அறையில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லாமல் உடனுக்குடன் சீர் செய்ய வேண்டும். குளியலறைக்கும் பூஜை அறைக்கும் இடைவெளி சற்று அதிகமாக இருக்க வேண்டும் பக்கத்து பக்கத்தில் இருக்கக் கூடாது. 

*அனைவரும் புழங்கக்கூடிய அறை அல்லது கூடம் வட திசையில் இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் வடக்கு நோக்கியோ கிழக்கு நோக்கியோ அமரும் வண்ணம் அவரது இருக்கை அமைய வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right