(எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்காக என்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இரண்டாவது மதிப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீத இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனிநபர் பிரேரணையில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்துக்கான அமைச்சின் பரிந்துரை மாத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை இதன் பிரகாரம் திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும், அதற்கான கால அவகாசம் ஜனவரி 14ஆம் திகதியுடன் முடிவடைவதாலும், பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்காக என்னால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை இரண்டாவது மதிப்பீட்டுக்காக எடுத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அத்துடன், இது தொடர்பான விவாதத்தை ஜனவரி 14ஆம் திகதிக்குப் பின்னர் வேறொரு நாளில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM