(லோகேஸ்)

செலான் வங்கியின் வெளிநாட்டு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட வருமான தோல்வியால் 1.3 பில்லியன் குறித்த ஒப்பந்தத்தைதிரும்பப்பெறும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசுடமை வங்கியான செலான் வங்கி இலங்கை வங்கியின் கையிருப்பிலிருந்த தனது 7 சதவீதமான பங்குகளை (13 மில்லியன் பங்குகள்) கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு விற்றது. அதில் பிரிமியர் பங்கு ஒன்றின் இறுதி கட்ட விலையாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு ஜே. பி. பங்கு தரகர்கள் மூலம் பங்குடமையாக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் பற்றிய தரவுகளுக்கான அனுமதி இலங்கை வங்கியின் ஆளுனரிடமிருந்து பெறப்படவில்லை. அதனால் குறித்த ஒப்பந்த்தை திரும்பபெறுவது மாத்திரமன்று ஓப்பந்தத்தில் ஊழல் புரிந்த முகவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க படவுள்ளதாக நிதியமைச்சர் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்நாட்டு பொருளாதார வளங்களை வெளிநாட்டுக்கு தாரைவார்த்துவருவதாக முன்னால் ஜனாதிபதி குற்றம் சுமத்துவதற்கு ஏதுவாக இடம்பெற்றுள்ள இச்சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த விற்பனை விநியோக நேரத்தில் பங்குசந்தை பரிவர்தனை தகவல்கள் கிடைக்கப்பெறாமை, அத்தோடு ஒப்பந்த தோல்விக்குறித்த விளங்கங்களை ஜே. பி பங்கு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முர்டா ஜெப்பர்ஜிவிடமிருந்து கேட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் கூறியுள்ளார்