19 வயதுக்குட்பட்ட மகளிர் இ - 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணிக்கு டயலொக் அனுசரணை

Published By: Vishnu

12 Jan, 2023 | 02:51 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவில் 2023 ஜனவரி 14ஆம் திகதிமுதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணை வழங்குகின்றது.

இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையும் தேசிய வீராங்கனையுமான விஷ்மி குணரத்ன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவ்வணியில் தஹாமி சனேத்மா, உமாயா ரத்நாயக்க, ரஷ்மி நேத்ராஞ்சலி, ரஷ்மிகா செவ்வந்தி, தெவ்மி விஹங்கா, மானுதி நாணயக்கார, சுமுது நிசன்சலா, பமோதா ஷைனி, விதுஷிகா பெரேரா துலங்கா திஸாநாயக்க, ரிஷ்மி சஞ்சனா, நெத்மி சேனாரத்ன, ஹரினி பெரேரா, விஹாரா செவ்வந்தி ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்றுநராக இலங்கையின் முன்னாள் தலைவியும் சகலதுறை வீராங்னையுமான ஷஷிகலா சிறிவர்தன செயற்படுகிறார்.

இலங்கை மகளிர் அணி  தனது இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஐக்கிய அரபு இராச்சியத்தை 52 ஓட்டங்களாலும் ஸ்கொட்லாந்தை 7 விக்கெட்களாலும் வெற்றிகொண்டு பெரும் உற்சாகம் அடைந்துள்ளது.

16 அணிகள் பங்குபற்றும் பிரதான லீக் சுற்றில் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

தனது ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை 14ஆம் திகதி எதிர்த்தாடும் இலங்கை, தொடர்ந்து பங்களாதேஷை 16ஆம் திகதியும் அவுஸ்திரேலியாவை 18ஆம் திகதியும் சந்திக்கும்.

லீக் சுற்று முடிவில் ஏ, டி ஆகிய குழுக்களில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகளும் பி, சி ஆகிய குழுக்களில் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகளும் இரண்டு குழுக்களில் சுப்பர் 6 சுற்றில் விளையாடும். ஒரு குழுவில் ஏ குழு அணிகள் டி குழு அணிகளுடனும் மற்றைய குழுவில் பி குழு அணிகள் சி குடு அணிகளுடனும் விளையாடும். முதலாவது லீக் சுற்றில் நான்காம் இடங்களைப் பெறும் அணிகள் நிரல்படுத்தல் சுற்றில் விளையாடும்.

சுப்பர் 6 சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் குறுக்கு அரை இறுதிப் போட்டிகளில் விளையாடும். அரை இறுதிகளில் வெற்றிபெறும் அணிகள் 19 வயதுக்குட்பட்ட இருபது 20 உலகக் கிண்ணத்தில் முதலாவது உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் பெப்ரவரி 29ஆம் திகதி ஒன்றையொன்று எதிர்த்தாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குமார் தர்மசேனாவுக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட்...

2026-03-16 16:04:49
news-image

பத்து வீரர்களுடன் விளையாடி ஜாவா லேனின்...

2026-03-15 01:31:22
news-image

பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு

2026-03-15 01:32:27
news-image

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நீல வர்ணங்களின் சமரில்...

2026-03-15 01:19:21
news-image

யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட...

2026-03-15 01:15:04
news-image

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ்...

2026-03-14 04:44:29
news-image

ஆதம் ஹில்மி குவித்த சதத்தின் உதவியுடன்...

2026-03-14 04:39:33
news-image

சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர்...

2026-03-13 21:00:51
news-image

இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  சுபர்ணன்...

2026-03-13 21:06:05
news-image

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின்...

2026-03-13 15:07:11
news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49