மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் செங்கலடிச் சந்திக்கு சற்று அப்பால் பதுளை வீதியில் உள்ள பாழடைந்த வளவொன்றுக்குள் மர்மமான முறையில் களற்றி வீசப்பட்ட நிலையில் ஆணினது நீளக் காற்சட்டை, 2 ஸ்மார்ட் போன்கள், தொப்பி, சாதாரண காலணி ஆகியவை காணப்பட்டதையடுத்து ஏறாவூர் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவை நேற்று (19.12.2016) திங்கட்கிழமை நள்ளிரவுக்கும் இன்று (20.12.2016) செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் அவ்விடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இப்பொருட்களுக்குரிய நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது தாக்கப்பட்டு கடத்தப்பட்டாரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

-அப்துல் கையூம்