விளையாட்டுத்துறை சட்ட விதிகளை துறைக்கு பொறுப்பான அமைச்சர் செயற்படுத்த வேண்டும் - சுனில் செனவீர

Published By: Digital Desk 5

12 Jan, 2023 | 01:08 PM
image

(நெவில் அன்தனி)

விளையாட்டுத்துறை சட்ட விதிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் குழுவினரும் நேர்மையாக அமுல்படுத்த முன்வரவேண்டும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் பீபா போட்டி பொது மத்தியஸ்தருமான சுனில் செனவீர வலியுறுத்தினார்.

விளையாட்டுத்துறை அமைச்சிரினால் புதிய விளையாட்டுத்துறை சட்டவிதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விதியின் பிரகாரம் செயல்பட்ட இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தல் குழு மற்றொரு விதியைக் கண்டுகொள்ளதாது ஆச்சரியத்ததை தருகிறது என அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் புதன்கிழமை (10)  ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்த சுனில் செனவீர இந்த விடயங்களைத் தெரிவித்தார்.  

அத்துடன், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட சில வேட்பு மனுக்களுக்கு எதிராக தமது தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடுகள் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரோ, அதிகாரிகளோ தங்களது முடிவை அறிவிக்காமல் இருப்பது மேலும் ஆச்சரியத்தை தருவதாக அவர் கூறினார்.

'விளையாட்டுத்துறை சட்ட விதிகளில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாட்டுத்துறை சங்கங்களில் நிருவாக உத்தியோகத்தர் பதவிகளை வகிக்க முடியாது எனவும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பினால் எவரேனும் ஒருவர் எந்தவொரு விளையாட்டுத்துறை சங்கத்திலும் எந்தவொரு பதவியையும் வகிக்க முடியாது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், முதலாவது விதியை ஏற்று அதன் பிரகாரம் செயல்பட்ட இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் குழு, மற்றொரு பரிந்துரையை புறக்கணித்துள்ளது. ஓய்வு நிலை நீதிபதி ஒருவரின் தலைமையிலான தேர்தல் குழுவின் இந்த செயல் பெரும் வியப்பை தோற்றுவித்துள்ளதுடன் அக் குழு நேர்மையாக செல்படுகிறதா என கேட்க வைக்கிறது.

'இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் விளையாட்டுத்துறை அமைச்சினால் தேர்தல் நடத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.  69 தினங்களுக்குகள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் பிறப்பித்த கட்டளையின் பிரகாரம் நாளைமறுதனம் (ஜனவரி 14) தேர்தல் நடத்தப்பட வேண்டும். 

இந் நிலையில் வேட்பு மனுக்கள் மீதான மேன்முறையீடுகள் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சினால் இறுதி முடிவு அறிவிக்கப்படாதது வியப்பை தருகிறது. ஒருவேளை குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடைபெறாவிட்டால் அது நீதிமன்றத்தின் கட்டளையை அவமதிப்பதாக அமையும்' என சுனில் செனவீர மேலும் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, மென்முறையீடுகள் தொடர்பான இறுதி முடிவுகள் விளையாட்டுத்துறை அமைச்சரினால் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35