(எம்.எம்.சில்வெஸ்டர்)
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றிருந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்பதை தவிர்த்திருந்த குற்றத்திற்காக ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தினால், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராத் தொகை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ஜஸ்வர் உமரின் தலையீட்டினால் 5 ஆயிரம் அமெரிக்க டொலராக குறைக்கப்பட்டுள்ளது.
ஆசிய கால்பந்து சம்மேளனத்திடம், ஜஸ்வர் உமரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீட்டை அடுத்து, ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் ஒழுக்காற்று குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், மீதமுள்ள 15 ஆயிரம் டொலர் அபராதத் தொகை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இலங்கை கால்பந்தாட்ட அணியானது, கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கத் தவறும் பட்சத்தில் மிகுதி அபாராதத் தொகையான 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றிருந்த 17 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த போதிலும், கடைசி நேரத்தில் அந்தப் சுற்றுப்பயணம் இரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணையை நடத்திய ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுக்காற்றுக் குழு, போட்டி விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கைக்கு 20 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்திருந்தது. எவ்வாறாயினும், ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்று உறுப்பினராகவுள்ள ஜஸ்வர் உமரின் முயற்சியினால் இந்த அபராதத் தொகையை குறைப்பதற்கு பெரும் உதவியாக அமைந்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM