நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

இதன்போது இந்திய மீனவர்கள் பயன்படுத்திய 2 மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் யாழ். கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களை யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.