இலங்கை மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய வர்த்தக ஆளுநர் தலைமையிலான அவுஸ்திரேலிய வர்த்தக பிரதிநிதிகள் குழுவுக்கும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.   

மீன்பிடி கைத்தொழில் துறையில் தேவையான அறிவு மற்றும் பயிற்சி நெறிகள், அத்துடன் அவுஸ்திரேலியாவில் பின்பற்றப்பட்டு வரும் முறைகள் வழங்க தாம் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய வர்த்தக ஆளுநர் க்ரேய்சன் பெரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.