கொழும்பில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொலன்னாவை பாலத்துக்கு அருகில் 5 கிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் 39 வயதான நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் 2.35 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 50 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கொழும்பு மோதரை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  வீடொன்றிலிருந்து 6 கிராம் ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர் (38 )  இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.