(இராஜதுரை ஹஷான்)
நாட்டுக்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.நாடு என்ற ரீதியில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக்கொள்ள அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என மைத்திரி, விமல், டலஸ் ஆகியோர் உறுதியளித்து சுதந்திர மக்கள் முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை அங்குரார்ப்பணம் செய்தனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,மேலவை இலங்கை கூட்டணி மற்றும் சுதந்திர மக்கள் சபை ஆகிய அரசியல் தரப்பினரை ஒன்றிணைந்து தலைமைத்துவ சபை ஊடாக புதிய அரசியல் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
17 அரசியல் கட்சிகள், 40 இற்கும் அதிகமான உறுப்பினர்கள், 30 இற்கும் அதிகமான தேசிய அமைப்புக்களை உள்ளடக்கிய வகையில் விமல் வீரவன்ச, மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகபெரும தலைமையில் பரந்துபட்ட சுதந்திர மக்கள் முன்னணி நேற்று (ஜன 11) மாலை சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, சுதந்திர மக்கள் சபை, மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் கட்சிகளை முன்னிலைப்படுத்தி ஸ்தாபிக்கப்படும் புதிய அரசியல் கூட்டணி அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று மாலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
சர்வமத வழிபாடுகளுடன் அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பமானது. பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆரம்ப உரையாற்றினார் அதனை தொடர்ந்து மேலவை இலங்கை கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்ச,சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகபெரும மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கூட்டணி ஸ்தாபிப்பின் நோக்கம் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் விசேட உரையாற்றினார்கள்.
இதனை தொடர்ந்து சுதந்திர மக்கள் முன்னணியின் கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் ஒன்றிணைந்த வகையில் இசைக்கப்பட்டது.
சுதந்திர மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் திலங்க சுமதிபால தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர,மேலவை இலங்கை கூட்டணியின் பிரதி செயலாளர் ஜி.வீரசிங்க,சுதந்திர மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் ஜி.எல்.பீரிஸ், சுதந்திர மக்கள் சபையின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஜனஜய பெரமுனவின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா,மாஹன கட்சியின் செயலாளர் அசங்க நவரத்ன,சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹெவா ஆகியோர் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு,பத்திரங்களை புதிய கூட்டணியின் பொதுச்செயலாளர் திலங்க சுமதிபாலவிடம் கையளித்தனர்.இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைத்தலுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM