நாள்பட்ட குடல் அழற்சி பாதிப்பை உண்டாக்கும் செயற்கையாக நிறமூட்டப்பட்ட உணவுகள்

Published By: Digital Desk 5

12 Jan, 2023 | 12:34 PM
image

இளைய தலைமுறையினர் தங்களது உணவு பழக்க வழக்கத்தை முற்றாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வீடுகளின் சமையலறையில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்து, சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வீதியோர உணவகங்களில் தயாராகும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள்.

குறிப்பாக பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகள், துரித உணவுகள், செயற்கையாக நிறமூட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு வகைகள்... ஆகியவற்றை பசியாறுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு குடல் அழற்சி பாதிப்பு ஏற்பட்டு, நட்ப்பட்ட குடல் அழற்சி நோயை உண்டாக்குகிறது.

சிலருக்கு சுற்றுப்புற சூழல் காரணிகளாலும், மரபியல் காரணிகளாலும் இத்தகைய பாதிப்பு உண்டாகிறது. அடிக்கடி மலம் கழித்தல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், வயிற்று வலி, மூட்டு வலி, கண் வலி, தோல் பாதிப்பு, இத்தகைய அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து நீடித்தால் அவர்களுக்கு பெருங்குடல் அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். இதனை உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து உரிய பரிசோதனைகளை மூலம் பாதிப்பினை துல்லியமாக அவதானித்து அதற்குரிய சிகிச்சையை முறையாக பெற வேண்டும்.

நாட்பட்ட குடல் அழற்சி பாதிப்பு உண்டாக்குவதில் செயற்கையாக வண்ணமூட்டப்பட்டு தயாரிக்கப்படும் உணவுகளின் பங்களிப்பு அதிகம் என்றும், குறிப்பாக சிவப்பு வண்ணத்தில் நிறமூட்டிய உணவுகளை உண்பவர்கள் இத்தகைய பாதிப்பிற்கு அதிகளவில் ஆளாகுவதாகவும் அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

அத்துடன் நிறமேற்றப்பட்ட ட்டாய்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றையும் தவிர்ப்பது நலம். பொதுவாக துரித உணவுகள் சுவைக்காக நிறமூட்டப்படுவது இயல்பு. எனவே இத்தகைய உணவுகளை முற்றாக தவிர்ப்பது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.‌

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29