(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதிவான் திலின கமகே, சட்ட மா அதிபரின் இணக்கத்துடன் சி.ஐ.டி.யினர் முன்வைத்த இரு நிபந்தனைகளுக்கு அமைய, வெளிநாட்டு பயணத் தடையை 10 நாட்களுக்கு நீக்கி உத்தரவிட்டார்.
நேற்று (11) இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் தமது சேவை பெறுநரை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து சி.ஐ.டி.யினரிடம் நீதிவான் வினவிய போது, சட்ட மா அதிபர் அளித்துள்ள இணக்கம் பிரகாரம் இரு நிபந்தனைகளின் படி அப்பயணத் தடையை தளர்த்த ஆட்சேபனை இல்லை என தெரிவித்தனர். இதனையடுத்தே நீதிவான் இதற்கான அனுமதியை அளித்தார்.
இதன்போது, இந்த வழக்கில் சந்தேக நபர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் மன்றில் ஆஜராகியிருந்தனர். அதன்படி இது குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2022 மே 9 ஆம் திகதி பிரதமருக்கு ஆதரவாக அலரி மாளிகைக்கு அருகே ஒன்று திரண்ட ஆதரவாளர்கள், அங்கிருந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதும், காலி முகத்திடலை அண்மித்த கோட்டா கோ கம அமைதிப் போராட்டக்காரர்கள் மீதும் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நாடெங்கும் வன்முறைகள் பல பதிவாகியிருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM