தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை சிட்னி நீதிமன்றம் ஒத்திவைத்தது

Published By: Sethu

12 Jan, 2023 | 10:01 AM
image

இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு  எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை சிட்னி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

இருபது20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்காக  இலங்கை அணியினர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த போது, தனது சம்மதமின்றி தன்னுடன்  தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம்  திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார். 

அவருக்கு  நவம்பர் 17  ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது.

200,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டி‍ருந்தார்,

 இந்நிலையில், தனுஷ்க குணதிலக்கவுக்கு  எதிரான பாலியல் வல்லுறவு வழக்கைபெப்ரவரி 23 ஆம் திகதி வரை சிட்னி டோனிங் சென்ரர் நீதிவான் டேவிட் பீரிஸ் இன்று ஒத்திவைத்தார்.

தனுஷ்க குணதிலக்க இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை. பெப்ரவரி 23 ஆம்  திகதி அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜரானால், தனுஷ்க நீதிமன்றில் ஆஜராகத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், தனுஷ்க குணதிலக்கவின் கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அவர் டேட்டிங் செயலிகள் எதனையும் பயன்படுத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் செல்வதற்கும்  தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09