தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்துபாேட்டியிட தீர்மானிக்க வில்லை - ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு

Published By: Digital Desk 5

12 Jan, 2023 | 09:29 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.  பொதுஜன பெரமுன உட்பட அனைத்து கட்சிகளுடன் தற்போது கலந்துரையாடி வருகின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்துபோட்டியிட தீர்மானித்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பில் கட்சியின நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இடம்பெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருக்கின்றது. என்றாலும் இந்த தேர்தலுக்கு முகம்கொடுப்பது தொடர்பாக நாங்கள் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் முகாமைத்துவ குழு ஏனைய கட்சிகளுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி வருகின்றது. அந்த வகையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கலந்துரைடி இருக்கின்றது. அதேபோன்று ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் தேர்தல் போட்டியிடுவது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர், தேரதலில் எவ்வாறு போட்டியிடுவது என நாங்கள் தீர்மானம் ஒன்றுக்கு வர இருக்கின்றோம். அந்த தீர்மானம் கட்சியின் செயற்குழுவில் விடப்பட்டு, செயற்குழு அனுமதி வழங்கிய பின்னரே ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்ற தீர்மானத்தை நாட்டுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் தெரிவிப்போம்.

என்றாலும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளையும்  இணைத்துக்கொண்டு ஐக்கியமாக  ஒன்றாக பயணிப்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08